/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/69,000 வடை மாலையில் பஞ்சமுக ஆஞ்சநேயர்69,000 வடை மாலையில் பஞ்சமுக ஆஞ்சநேயர்
69,000 வடை மாலையில் பஞ்சமுக ஆஞ்சநேயர்
69,000 வடை மாலையில் பஞ்சமுக ஆஞ்சநேயர்
69,000 வடை மாலையில் பஞ்சமுக ஆஞ்சநேயர்
ADDED : ஜன 11, 2024 09:06 PM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் திருப்பந்தியூர் பகுதியில் அமைந்துள்ளது விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். இங்கு, நேற்று அனுமந் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 69,000 வடைமாலை சாற்றுதல் நடந்தது.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு விஷ்வரூப தரிசனம் ஹோமமும் திருமஞ்சனமும் நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 69,000 வடைமாலை அலங்கார தரிசனமும் தீபாராதனையும் நடந்தது.
தொடர்ந்து காலை 10:30 மணிக்கு ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் ஸ்ரீராமர் திருக்கோலத்தில் ஊஞ்சல் சேவையும், ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் மூலர் புஷ்ப அலங்காரமும் திருப்பாவை சாற்றுமுறையும் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் சென்னை, ஸ்ரீபெரும்புதுார், திருப்பந்தியூர் மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
இதேபோல், திருமழிசை வீராஞ்சநேய சுவாமி கோவிலில் நேற்று அனுமந் ஜெயந்தியை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு சந்தனகாப்பும், மாலை 6:00 மணிக்கு பக்தி இன்னிசையும், இரவு 9:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது.