/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த கட்டட தொழிலாளர் சங்கம் கோரிக்கைமருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த கட்டட தொழிலாளர் சங்கம் கோரிக்கை
மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த கட்டட தொழிலாளர் சங்கம் கோரிக்கை
மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த கட்டட தொழிலாளர் சங்கம் கோரிக்கை
மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த கட்டட தொழிலாளர் சங்கம் கோரிக்கை
ADDED : ஜூலை 13, 2011 01:28 AM
புதுச்சேரி : மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என புதுச்சேரி
கட்டடக்கலைத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஏ.ஐ.டி.யூ.சி.,
பொதுச்செயலாளர் அபிஷேகம், கட்டடக் கலை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஜெயபாலன்
உள்ளிட்டோர் கூட்டாக தொழிலாளர் துறை ஆணையரிடம் அளித்துள்ள மனு: புதிய தொழிலாளர்களை
நலவாரியத்தில் சேர்த்துகொள்வதற்கான விண்ணப்ப படிவங்கள் புதிய தொழிலாளர்களால்
பூர்த்தி செய்யப்பட்டு, நலவாரியத்தால் பெறப்பட்டு உள்ளது. நலவாரியம்,
விண்ணப்பித்தவர்களை விசாரிப்பது என்ற அடிப்படையில் இதுவரை ஒருவரைக் கூட பதிவு செய்ய
வில்லை. விண்ணப்பித்த தொழிலாளர்கள் பலர் இடைப்பட்ட காலத்தில் இறந்துள்ளனர்.
அவர்களது வாரிசுகள், சங்கத்திடம் நல உதவியை பெற்று தர வலியுறுத்தி வருகின்றனர்.
விண்ணப் பித்தவர்களை நலவாரியத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ
காப்பீடு திட்டம், உடனடியாக அறிமுகப்படுத்தப்பட்டு, நலவாரியத்தில் பதிவு செ#த
அனைத்து தொழிலாளர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில்
கூறப்பட்டுள்ளது.