/உள்ளூர் செய்திகள்/சென்னை/அமைச்சர்கள் சொன்னது அது அதிகாரிகள் சொன்னது இதுஅமைச்சர்கள் சொன்னது அது அதிகாரிகள் சொன்னது இது
அமைச்சர்கள் சொன்னது அது அதிகாரிகள் சொன்னது இது
அமைச்சர்கள் சொன்னது அது அதிகாரிகள் சொன்னது இது
அமைச்சர்கள் சொன்னது அது அதிகாரிகள் சொன்னது இது
ADDED : ஜன 12, 2024 01:06 AM
செங்குன்றம், பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து, அமைச்சர் அறிவித்த நிலையில், அதிகாரிகளின் திடீர் அறிவிப்பால், ரேசன் கடை ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
சென்னை மற்றும் தமிழமெங்கும், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த நிலையில், 1,000 ரூபாயுடன், பொங்கல் பரிசு தொகுப்பு, நேற்று முன் தினம் முதல் வழங்கப்படுகிறது. முதல்வர் துவக்கி வைத்த பிறகு, கூட்டுறத்துறை பெரிய கருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர், சென்னையில் பேட்டி அளித்தனர்.
அதில், பரிசு தொகுப்பு வாங்க, ‛டோக்கன்' பெறாதவர்கள், கவலைப்படத்தேவையில்லை. ரேசன் கார்டுடன் கடைகளுக்கு சென்று, 14ம் தேதி வரை, பெற்றுக்கொள்ளலாம் என்றனர்.
ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை, 13ம் தேதியுடன் முடித்துக்கொள்ள வேண்டும் என, உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், நேற்று மதியம், வாய்மொழியாகவும், ‛வாட்ஸ் ஆப்' தகவல் மூலமும், தெரிவித்துள்ளனர். அதனால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ரேசன் கடை ஊழியர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
டோக்கன் பெறாதவர்கள், 14ம் தேதி வந்து, பரிசு தொகுப்பு கேட்டால், எப்படி கொடுப்பது என கேள்வி எழுந்துள்ளது. கடந்த மாதம், ‛மிக்ஜாம்' புயல், மழை வெள்ள நிவாரணம் பெற, மாதவரம், மாத்துார், செங்குன்றம், அலமாதி சுற்றுவட்டாரங்களில், ‛டோக்கன்' பெற்றவர்களுக்கு, நிவாரணம் வழங்காமல், ஒரு நாள் முன்னதாகவே, அந்த பணி நிறுத்தப்பட்டது.
அதனால், அவர்களுக்கும், ரேசன் கடை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது, மீண்டும் அதே பிரச்னை ஏற்படும், நிலை உள்ளதாக, ரேசன் கடை ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்.