/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஆர்ப்பாட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 16 பேர் கைதுஆர்ப்பாட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 16 பேர் கைது
ஆர்ப்பாட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 16 பேர் கைது
ஆர்ப்பாட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 16 பேர் கைது
ஆர்ப்பாட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 16 பேர் கைது
ADDED : ஜன 12, 2024 12:05 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மற்றும் மழை, வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்காத தி.மு.க., அரசை கண்டித்து இந்துமக்கள் கட்சி சார்பில் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சாய்கமல் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் பாலு, மாவட்ட செயலாளர் முத்துக்குமார், துணைத் தலைவர் அசோக்குமார், இளைஞரணி பொது செயலாளர் கோபி, செயலாளர் விஜய் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம் டவுன் போலீசார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் 16 பேரை கைது செய்தனர்.