ADDED : ஜன 12, 2024 12:41 AM

விருதுநகர் : விருதுநகரில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவது உட்பட 12 அம்ச கோரிக்கைகளுக்கு உடனடியாக ஆணை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் மனோகரன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் ராமமூர்த்தி, தமிழக ஆசிரியர் கூட்டணி செயலாளர் சுப்புலட்சுமி பேசினர்.