/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பொங்கல் விழா எதிரொலி வெல்லம் விலை உயர்வுபொங்கல் விழா எதிரொலி வெல்லம் விலை உயர்வு
பொங்கல் விழா எதிரொலி வெல்லம் விலை உயர்வு
பொங்கல் விழா எதிரொலி வெல்லம் விலை உயர்வு
பொங்கல் விழா எதிரொலி வெல்லம் விலை உயர்வு
ADDED : ஜன 11, 2024 09:37 PM
ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார், பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல மார்க்கெட்டில் ஏலம் நடந்தது.
தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ளதால், இதில், ஏராளமான வியாபாரிகள் பங்கேற்றனர்.
இதற்கேற்ப கடந்த வாரம், 1,350க்கு விற்ற, 30 கிலோ உருண்டை வெல்ல சிப்பம், இந்த வாரம், 1,450 ரூபாயாகவும், 1,400க்கு விற்ற அச்சு வெல்லம், 1,700 ரூபாயாகவும் உயர்ந்தது.
உருண்டை வெல்லம் - 5,800 சிப்பங்கள், அச்சு வெல்லம் - 1,300 சிப்பங்கள் மூலம், 1.10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.