/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மருத்துவ கல்லுாரியில் முடநீக்கியல் பிரிவு மருத்துவ குழுவுக்கு பாராட்டுமருத்துவ கல்லுாரியில் முடநீக்கியல் பிரிவு மருத்துவ குழுவுக்கு பாராட்டு
மருத்துவ கல்லுாரியில் முடநீக்கியல் பிரிவு மருத்துவ குழுவுக்கு பாராட்டு
மருத்துவ கல்லுாரியில் முடநீக்கியல் பிரிவு மருத்துவ குழுவுக்கு பாராட்டு
மருத்துவ கல்லுாரியில் முடநீக்கியல் பிரிவு மருத்துவ குழுவுக்கு பாராட்டு
ADDED : ஜன 11, 2024 09:49 PM

ஊட்டி;ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் முடநீக்கியல் பிரிவில், சிறப்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பொதுமக்களின் நலன் கருதி எலும்பியல் சிறப்பு மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, முடநீக்கியல் பிரிவில் கடந்த ஓராண்டு காலமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
அதில், முதுகு தண்டு வட அறுவை சிகிச்சைகள், குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை சீராக்கும் அறுவை சிகிச்சைகள், எலும்பு புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட முடநீக்கியல் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகளை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு செய்யப்பட்டது.
முடநீக்கியல் சம்பந்தமான சிகிச்சைகளை சிறப்பாக மேற்கொண்ட முடநீக்கியல் துறையின் தலைவர் அமர்நாத், துறையின் சிறப்பு மருத்துவர் வினோத் மற்றும் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
அரசு மருத்துவ கல்லுாரி டீன் கீதாஞசலி தலைமையில் நடந்தது. அதில், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், நிலைய மருத்துவ. அலுவலர் ரவிசங்கர் ஆகியோர் பங்கேற்று பாராட்டு தெரிவித்தனர்.
மருத்துவ கல்லுாரி டீன் கீதாஞ்சலி கூறுகையில்,''மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முடநீக்கியல் பிரிவில், 70 பேருக்கு மேலாக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மிக சிறந்த முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சை மேற்கொண்ட பலர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். முடநீக்கியல் சிறப்பு புறநோயாளிகள் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,''என்றார். துணை முதல்வர் ஜெயலலிதா உட்பட மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர்.