தற்கொலை செய்த விவசாயியின் சொத்து முடக்கம் நிறுத்திவைப்பு
தற்கொலை செய்த விவசாயியின் சொத்து முடக்கம் நிறுத்திவைப்பு
தற்கொலை செய்த விவசாயியின் சொத்து முடக்கம் நிறுத்திவைப்பு
ADDED : ஜன 12, 2024 01:25 AM
திருவனந்தபுரம்,கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, ஆலப்புழாவின் தகழி என்ற இடத்தில் உள்ள அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த விவசாயி பிரசாத். நெல் சாகுபடி செய்து வந்த இவர், கேரள மாநில வளர்ச்சி கழகத்தில் இருந்து 60,000 ரூபாய் கடன் பெற்றார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக கடன் தவணையை செலுத்த முடியாமல் தவித்து வந்த இவர், கடந்த ஆண்டு நவம்பரில் தற்கொலை செய்து இறந்தார்.
அவர் எழுதி வைத்த கடிதத்தில், அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கான தொகை வழங்கப்படவில்லை என்றும், தன் தற்கொலைக்கு இடது ஜனநாயக முன்னணி அரசு மற்றும் சில வங்கி களே காரணம் என, குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், விவசாயி பிரசாத்துக்கு சொந்தமான அவரது வீட்டை முடக்குவது தொடர்பாக, கேரள மாநில வளர்ச்சி கழகம் சமீபத்தில் 'நோட்டீஸ்' அனுப்பியது.
இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் இந்த விவகாரத்தில் தலையிட்டார்.
சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும்படியும், கடன் தொகையை திருப்பிச் செலுத்த விவசாயியின் குடும்பத்தினருக்கு அதிகபட்ச சலுகை வழங்கும்படியும், கேரள வளர்ச்சிக் கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.