/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஆமைகள் பாதுகாப்பு குறித்து வனப் பணியாளருக்கு பயிற்சிஆமைகள் பாதுகாப்பு குறித்து வனப் பணியாளருக்கு பயிற்சி
ஆமைகள் பாதுகாப்பு குறித்து வனப் பணியாளருக்கு பயிற்சி
ஆமைகள் பாதுகாப்பு குறித்து வனப் பணியாளருக்கு பயிற்சி
ஆமைகள் பாதுகாப்பு குறித்து வனப் பணியாளருக்கு பயிற்சி
ADDED : ஜன 12, 2024 12:18 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலக கூட்ட அரங்கத்தில் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வனவிலங்கு நிறுவனம் சார்பில் ஆமைகள் பாதுகாப்பு குறித்து முட்டைகள் குஞ்சு பொரிக்கும் மையப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
உத்ரகாண்ட் மாநிலம்டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனம் விஞ்ஞானி நேகரு பிரபாகரன், ஆமைகளின் குணங்கள், முட்டையிடும்காலம், அவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து கூறினார்.
மேற்கு மாநிலங்களைவிட தென் பகுதியில்ஆமைகள் இனப்பெருக்கம் அதிகரித்துஉள்ளது. 100 முட்டைகளில் 98 சதவீதம் வரை குஞ்சுகள் பொரிக்கப்படுகிறது என்றார்.
வன ரேஞ்சர்கள் ராமநாதபுரம் பிரதீப், கீழக்கரை செந்தில்குமார் மற்றும்வனவிலங்கு நிறுவன திட்ட உதவி அலுவலர்கள்பரத், லட்சுமி சந்திரன்,பார்வதி நம்பியார், தனுஷ்கோடி, கீழக்கரை, துாத்துக்குடி ஆமைகுஞ்சு பொரிப்பு மையப்பணியாளர்கள் பங்கேற்றனர்.