Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/குறைந்த விலை மனை 600 ச.அ. ஆகிறது பரப்பளவு

குறைந்த விலை மனை 600 ச.அ. ஆகிறது பரப்பளவு

குறைந்த விலை மனை 600 ச.அ. ஆகிறது பரப்பளவு

குறைந்த விலை மனை 600 ச.அ. ஆகிறது பரப்பளவு

ADDED : ஜன 11, 2024 10:46 PM


Google News
சென்னை:புதிதாக உருவாக்கப்படும் மனைப்பிரிவுகளில், குறைந்த விலைப்பிரிவு மனைகளின் பரப்பளவை, 600 சதுர அடி வரை அதிகரிக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு மனைப்பிரிவு திட்டத்திலும், குறைந்த வருவாய் பிரிவினர் வாங்கும் விலையில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மனைகள் இருக்க வேண்டும் என்பது விதி. அதில், இ.டபிள்யு.எஸ்., எனப்படும், குறைந்த வருவாய் பிரிவினருக்கான மனை, 400 சதுர அடியில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. அதை தற்போது, 500 சதுர அடி வரை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த அளவை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தற்போது, 600 சதுர அடி வரை அதிகரிப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us