ADDED : ஜன 12, 2024 12:59 AM

வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், மனமகிழ்ச்சி மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
விழாவில், பொங்கல் வைத்து பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கூடுதல் மத்திய கமிஷனர் பங்கஜ், மண்டல கமிஷனர்கள் ஆண்ட்ரூ பிரபு, அமுதா, ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.