Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கலந்தாய்வு

கலந்தாய்வு

கலந்தாய்வு

கலந்தாய்வு

ADDED : ஜூலை 13, 2011 01:34 AM


Google News
கிள்ளை : சி.முட்லூர் அரசு கல்லூரியில் வரும் 18, 19 ஆகிய தேதிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.இது குறித்து கல்லூரி முதல்வர் தங்கமணி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

சி.முட்லூர் அரசு கல்லூரியில் இந்த கல்வியாண்டிற்கான புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 27ம் தேதி முதல் 4ம் தேதிவரை நடத்தப்பட்டது. எஞ்சிய காலி இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடக்கிறது. அதில், 18ம் தேதி கணினி அறிவியல், இயற்பியல், கணிதம், பொது மற்றும் தொழில் வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளும், 19 ம்தேதி பி.காம், பி.பி.ஏ, பி.ஏ., பொருளியல், தமிழ் இலக்கியம் மற்றும் ஆங்கில இலக்கியப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. அழைப்பு கடிதம் பெற்றவர்கள் குறிப்பிட்ட நாளில் அனைத்து சான்றுகளுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us