/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அறிவியல் கண்காட்சியில் அரசு பள்ளி மாணவி சாதனைஅறிவியல் கண்காட்சியில் அரசு பள்ளி மாணவி சாதனை
அறிவியல் கண்காட்சியில் அரசு பள்ளி மாணவி சாதனை
அறிவியல் கண்காட்சியில் அரசு பள்ளி மாணவி சாதனை
அறிவியல் கண்காட்சியில் அரசு பள்ளி மாணவி சாதனை
ADDED : ஜன 12, 2024 12:12 AM

விழுப்புரம்: தென் இந்திய அளவில் நடைபெற உள்ள அறிவியல் கண்காட்சிக்கு பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் நெட்டப்பாக்கம் அடுத்த தமிழக பகுதியான பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி நந்தினி, முதலிடம் பிடித்தார்.
தொடர்ந்து கடலுாரில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் முதலிடம் பிடித்தார்.
அனைத் தொடர்ந்து, தென்னிந்திய அளவில் ஆந்திர பிரதேசம் விஜயவாடாவில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தேர்வாகி உள்ளார்.
மாணவி நந்தினியை விழுப்புரம் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி, பள்ளி துணை ஆய்வாளர்கள் ராமதாஸ், வீரமணி ஆகியோர் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பள்ளி பொறுப்பாசிரியர் ஜாபர்அலி, அறிவியல் ஆசிரியர்கள் கவிதா, நளினி உடனிருந்தனர்.