UPDATED : ஜூன் 17, 2024 10:27 AM
ADDED : ஜூன் 17, 2024 08:33 AM

திருவனந்தபுரம்: அளவுக்கு அதிகமாக மிஞ்சிபோன பரோட்டாவை சாப்பிட்ட 5 மாடுகள் பலியானது. கேரளாவில் நடந்த இந்த துயர சம்பவம் விவரம் வருமாறு:
கொல்லம் அருகே வட்டப்பாரா என்ற பகுதியை சேர்ந்த விவசாயி ஹசபுல்லா. இவர் மாட்டுப்பண்ணை நடத்தி வருவதுடன், பால் விநியோகமும் செய்து வருகிறார். வழக்கத்திற்கு மாறாக ஓட்டல்களில் மிஞ்சிய பரோட்டாவை வாங்கி மாடுகளுக்கு உணவாக வழங்கியுள்ளார். சாப்பிட்ட சில மணி நேரத்தில் 5 மாடுகளும் திடீரென இறந்தன. இது குறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளித்தார். மாடுகளை பரிசோதித்ததில் உணவு ஜீரணம் ஆகாமல், வயிற்றுக்கோளாறு ஏற்பட்டதால் மாடுகள் இறந்தது தெரிய வந்தது.
விவசாயிக்கு நிவாரணம்
கால்நடை துறை அமைச்சர் சிஞ்சுராணி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். இறந்த மாடுகளுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகம் பரோட்டோ, பலாப்பழம், சோறு ஆகியவற்றை மாடுகளுக்கு வழங்க வேண்டாம் என டாக்டர்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.