Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/விளம்பரம் செய்ய சுயச்சான்று அவசியம்

விளம்பரம் செய்ய சுயச்சான்று அவசியம்

விளம்பரம் செய்ய சுயச்சான்று அவசியம்

விளம்பரம் செய்ய சுயச்சான்று அவசியம்

UPDATED : ஜூன் 17, 2024 10:31 AMADDED : ஜூன் 17, 2024 09:52 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய சுயச்சான்று ஜூன் 18 முதல் கட்டாயமாக்கப்படுகிறது. தவறான வழிகாட்டுதலை தவிர்க்கவும், நுகர்வோர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இது வழிவகை செய்யும் என சுப்ரீம்கோர்ட் கூறியுள்ளது.

போலி விளம்பரங்களால் பலர் பாதிக்கப்படுவதாகவும், தவறான வழியை காட்டவும் முயற்சிக்கும் விளம்பரத்திற்கு கடிவாளம் போட வேண்டும் என்ற நோக்கில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட் கடந்த மே மாதம் 7 ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி விளம்பர தாரர்கள், விளம்பர ஏஜன்ஸிகள் தங்களின் சுயச்சான்றை சமர்ப்பிக்க வேண்டும். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் டிஜிட்டல் மீடியாக்களில் விளம்பரம் செய்ய இது மிக அவசியம் ஆகும்.

இணையதளத்தில் பதிவேற்றம்




இது வரும் 18 ம் தேதி முதல் இது கட்டாயமாக்கப்படுகிறது. இதற்கான சுயச்சான்றை மத்திய அரசின் பிரஸ்கவுன்சில் இணைய தளத்தில் cbcindia.gov.in/cbc/advt-login பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us