/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மனித உரிமைகள் பிரிவு மாணவிகளுக்கு விழிப்புணர்வுமனித உரிமைகள் பிரிவு மாணவிகளுக்கு விழிப்புணர்வு
மனித உரிமைகள் பிரிவு மாணவிகளுக்கு விழிப்புணர்வு
மனித உரிமைகள் பிரிவு மாணவிகளுக்கு விழிப்புணர்வு
மனித உரிமைகள் பிரிவு மாணவிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜன 12, 2024 03:57 AM

கடலுார்: கடலுார் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் கல்லுாரி, பள்ளி மற்றும் ஐ.டி.ஐ., விடுதி மாணவியர்கள் சாதி, மதம் வேற்றுமையை களைந்து ஒற்றுமையாக வாழ்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் செம்மண்டலம் அரசு ஐ.டி.ஐ.,யில் நடந்த நிகழ்ச்சிக்கு, அரசு ஐ.டி.ஐ., முதல்வர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி., நாகராஜன், பயிற்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, குமாரி, சங்கரசுப்பு, அழகானந்தம், இன்ஸ்பெக்டர் தீபா, புள்ளியியல் ஆய்வாளர் ரவிசங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில், சாதி, மதம் வேற்றுமையை களைந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். பட்டியல் இன மாணவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள், பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது, மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை வெற்றிச்செல்வி, சப் இன்ஸ்பெக்டர் பாலசந்தர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.