ADDED : ஜன 11, 2024 11:58 PM

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அரசு நடுநிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் சாமிராஜ் தர்மகண்ணு தலைமை தாங்கினார்.
நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அய்யம்மாள் , பல் மருத்துவர் ஹெலன் ஆகியோர் கலந்து கொண்டு போதைப் பொருளால்ஏற்படும் தீமைகள், நோய்கள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினர்.
கிராமப்புற செவிலியர் லலிதா கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டு, தொடர்ந்து மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.