/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா 2வது முறையாக ரத்துஅரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா 2வது முறையாக ரத்து
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா 2வது முறையாக ரத்து
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா 2வது முறையாக ரத்து
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா 2வது முறையாக ரத்து
ADDED : ஜன 11, 2024 08:03 PM
ஓசூர்:ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வந்தது; போலுப்பள்ளி அருகே மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கட்டப்பட்டதால், ஓசூர் அரசு தாலுகா மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அதற்கு தேவையான கட்டடங்களை கட்ட, தி.மு.க., அரசு, 100 கோடி ரூபாயை ஒதுக்கிய நிலையில், ராயக்கோட்டை சாலையில் உள்ள காரப்பள்ளி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது.
கடந்த நவ., 22ல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் இல்ல திருமணம் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் முதல்வர், ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கிவைப்பார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், முதல்வர் வருகை ரத்து செய்யப்பட்டது. அதனால், அடிக்கல் நாட்டு விழா நடக்கவில்லை.
இரு மாதங்கள் கடந்த நிலையில், நேற்று முன்தினம் காலை மீண்டும் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், எந்த காரணமும் கூறாமல், நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எல்காட் நிர்வாகம் சார்பில், காணொலிக் காட்சிக்கு தோவையான எல்.இ.டி., திரை உள்ளிட்ட அனைத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சி ரத்தானதால், அவற்றை திரும்ப எடுத்துச் சென்றனர். முதல்வர் அடிக்கல் நாட்டு விழா இருமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி துவங்கப்படாமல் உள்ளது.