/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/சாலை விரிவாக்க பணி நாளை மின் நிறுத்தம்சாலை விரிவாக்க பணி நாளை மின் நிறுத்தம்
சாலை விரிவாக்க பணி நாளை மின் நிறுத்தம்
சாலை விரிவாக்க பணி நாளை மின் நிறுத்தம்
சாலை விரிவாக்க பணி நாளை மின் நிறுத்தம்
ADDED : ஜன 11, 2024 10:29 PM
திருத்தணி:திருத்தணி- அரக்கோணம் நெடுஞ்சாலை மற்றும் சித்துார் சாலை ஆகிய இடங்களில் திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்கம் பணிகள் செய்து வருகின்றனர்.
சாலை விரிவாகத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்றி மாற்று இடத்தில் நடவு செய்வதற்கு மின்வாரிய துறையினர் தீர்மானித்துள்ளனர். இதனால் நாளை திருத்தணி நகரம்-1, அரக்கோணம் சாலை, திருத்தணி ஒன்றிய அலுவலக சந்து, கண்ணபிரான் நகர்.
பழைய தர்மராஜா கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மின்சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது என, திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாரிராஜ் தெரிவித்துள்ளார்.