தமிழகத்திற்கு கூடுதல் நிதி ; மாநிலம் வாரியாக விவரம் தந்தார் ரயில்வே அமைச்சர்
தமிழகத்திற்கு கூடுதல் நிதி ; மாநிலம் வாரியாக விவரம் தந்தார் ரயில்வே அமைச்சர்
தமிழகத்திற்கு கூடுதல் நிதி ; மாநிலம் வாரியாக விவரம் தந்தார் ரயில்வே அமைச்சர்
UPDATED : ஜூலை 28, 2024 12:13 PM
ADDED : ஜூலை 28, 2024 10:56 AM

புதுடில்லி: நடப்பு நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு என்றும், இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்களை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
2024 -25க்கான நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் 2.65 லட்சம் கோடி ஒதுக்கியிருப்பதாகவும், தமிழகத்திற்கு 6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது பா.ஜ., ஆளும் சில மாநிலங்களை விட அதிகம் ஆகும். இதனை விட பல மாநிலங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு பாதை அமைக்க சர்வே செய்யப்பட்டது. இது இன்னும் செயல்படுத்த முடியாமல் உள்ளது. 2,759 எக்டேர் நிலம் தேவைப்படுகிறது என தென்னக ரயில்வே கேட்டு கொண்டது.
ஆனால் தமிழக அரசு தற்போது 807 எக்டேர் நிலம் ஒதுக்கியது. இதற்கான 871 கி.மீட்டர் பாதை பணிகள் நடந்து வருகிறது. புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும். உள்ளூர் திட்டங்களான திண்டிவனம், திருவண்ணாமலை, திண்டிவனம்- நகரி, ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி, ஈரோடு - பழனி போன்ற ரயில்வே திட்டங்களுக்கு 2 மடங்கு நிதி அதிகரித்து ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
தமிழகத்திற்கு ரூ.6,362 கோடி
நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள் பின்வருமாறு:
* மத்திய பிரதேசம்- (பா.ஜ., ஆட்சி) ரூ.14.738 கோடி நிதி ஒதுக்கீடு. இது 8.08 சதவீதம்.
* குஜராத் (பா.ஜ., ஆட்சி) ரூ. 8.743 கோடி நிதி ஒதுக்கீடு. இது 4.79 சதவீதம்.
* உத்தரபிரதேசம்- (பா.ஜ., ஆட்சி) ரூ. 19,848 கோடி நிதி ஒதுக்கீடு. இது 10.88 சதவீதம்.
* ராஜஸ்தான்- (பா.ஜ., ஆட்சி) ரூ.9,959 கோடி நிதி ஒதுக்கீடு. இது 5.46 சதவீதம்.
* உத்தரகண்ட் - (பா.ஜ., ஆட்சி) ரூ.5,131 கோடி நிதி ஒதுக்கீடு. இது 2.81 சதவீதம்.
* ஹரியானா- (பா.ஜ., ஆட்சி) ரூ.3,383 கோடி நிதி ஒதுக்கீடு. இது 1.85 சதவீதம்.
* ஒடிசா- (பா.ஜ., ஆட்சி) ரூ.10,586 கோடி நிதி ஒதுக்கீடு. இது 5.80 சதவீதம்.
* சத்தீஸ்கர்- (பா.ஜ., ஆட்சி) ரூ.6,922 கோடி நிதி ஒதுக்கீடு. இது 3.79 சதவீதம்.
* மஹாராஷ்டிரா- (பா.ஜ., கூட்டணி ஆட்சி) ரூ.15,940 கோடி நிதி ஒதுக்கீடு. இது 8.74 சதவீதம்.
* பீஹார்- (பா.ஜ., கூட்டணி ஆட்சி) ரூ.10,033 கோடி நிதி ஒதுக்கீடு. இது 5.50 சதவீதம்.
* ஆந்திரா- (பா.ஜ., கூட்டணி ஆட்சி) ரூ.9,151 கோடி நிதி ஒதுக்கீடு. இது 5.02 சதவீதம்.
* ஹிமாச்சல் பிரதேசம்- (காங்., ஆட்சி) ரூ.2,698 கோடி நிதி ஒதுக்கீடு. இது 1.48 சதவீதம்.
* தெலுங்கானா- (காங்., ஆட்சி) ரூ.5,336 கோடி நிதி ஒதுக்கீடு. இது 2.92 சதவீதம்.
* கர்நாடகா- (காங்., ஆட்சி) ரூ.7,559 கோடி நிதி ஒதுக்கீடு. இது 4.14 சதவீதம்.
* பஞ்சாப்- (ஆம்ஆத்மி ஆட்சி) ரூ.5,147 கோடி நிதி ஒதுக்கீடு. இது 2.82 சதவீதம்.
* புதுடில்லி- (ஆம்ஆத்மி ஆட்சி) ரூ.2,582 கோடி நிதி ஒதுக்கீடு. இது 1.42 சதவீதம்.
* மேற்குவங்கம்- (திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி) ரூ.13,941 கோடி நிதி ஒதுக்கீடு. இது 7.64 சதவீதம்.
* ஜார்க்கண்ட்- (காங்., கூட்டணி ஆட்சி) ரூ.7,302 கோடி நிதி ஒதுக்கீடு. இது 4 சதவீதம்.
* கேரளா- (இடதுசாரி ஆட்சி) ரூ.3,011 கோடி நிதி ஒதுக்கீடு. இது 1.65 சதவீதம்.
* தமிழகம்- (தி.மு.க., ஆட்சி) ரூ.6,362 கோடி நிதி ஒதுக்கீடு. இது 3.49 சதவீதம்.
* 7 வடகிழக்கு மாநிலங்கள் ( அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா) ரூ.10,376 கோடி நிதி ஒதுக்கீடு. இது 5.69 சதவீதம்.
* ஜம்மு காஷ்மீர்- ரூ.3,694 கோடி நிதி ஒதுக்கீடு. இது 2.02 சதவீதம்.
அனைத்து மாநிலங்களும் சேர்த்து, மொத்தம் ரூ. 1,82,442 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.