சீனாவில் கன மழை; மண் சரிவில் 11 பேர் பலி
சீனாவில் கன மழை; மண் சரிவில் 11 பேர் பலி
சீனாவில் கன மழை; மண் சரிவில் 11 பேர் பலி
ADDED : ஜூலை 28, 2024 11:34 AM

பீஜிங்: சீனாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் கிழக்குப் பகுதி முழுவதிலும், கேமி புயலால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில் ஒரு வீட்டில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் மலைப்பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் டெலிவரி பாய் மீது மரம் விழுந்தது. அவர் உயிரிழந்தார். கேமி புயல் சீனாவை அடைவதற்கு முன்பு பிலிப்பைன்ஸில் பெய்த கனமழையால் 34 பேர் உயிரிழந்தனர்.