/உள்ளூர் செய்திகள்/சென்னை/தாம்பரம் மாநகராட்சியில் வெள்ளம் தேங்க காரணம் என்ன கால்வாய் வசதி இல்லை... உபரி நீர் கால்வாய்கள் மாயம்...தாம்பரம் மாநகராட்சியில் வெள்ளம் தேங்க காரணம் என்ன கால்வாய் வசதி இல்லை... உபரி நீர் கால்வாய்கள் மாயம்...
தாம்பரம் மாநகராட்சியில் வெள்ளம் தேங்க காரணம் என்ன கால்வாய் வசதி இல்லை... உபரி நீர் கால்வாய்கள் மாயம்...
தாம்பரம் மாநகராட்சியில் வெள்ளம் தேங்க காரணம் என்ன கால்வாய் வசதி இல்லை... உபரி நீர் கால்வாய்கள் மாயம்...
தாம்பரம் மாநகராட்சியில் வெள்ளம் தேங்க காரணம் என்ன கால்வாய் வசதி இல்லை... உபரி நீர் கால்வாய்கள் மாயம்...
ADDED : ஜன 12, 2024 12:39 AM
தாம்பரம் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், மழைநீர் கால்வாய்களை முறையாக திட்டமிட்டு செயலப்படுத்தாததாலும், ஏரி உபரி நீர் கால்வாய்கள் மாயமானதாலும், ஒவ்வொரு மழையிலும் வெள்ளம் தேங்குவதற்கு காரணம் என்று, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
'மிக்ஜாம்' புயல் காரணமாக, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, சி.டி.ஓ., காலனி, கிருஷ்ணா, மூகாம்பிகை, குட்வில், அன்னை அஞ்சுகம், பத்மாவதி, பம்மல் முத்தமிழ், சரஸ்வதி, பாரி, அருள், காயத்ரி, சாந்தி, காந்தி, ராஜாஜி, அம்பேத்கர், எம்.ஜி.ஆர்., ஜோதி நகர்கள், பதுவஞ்சேரி, நுாத்தஞ்சேரி, அண்ணா தெரு, ரிக்கி கார்டன், விக்னேஷ் அவென்யூ, கர்ணன் தெரு, ஜகஜீவன் ராம் நகர் குளக்கரை பகுதி, இந்திர நகர் கிழக்கு, ஹவுசிங் போர்ட், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, செம்பாக்கம் பகுதிகள் மழை நீரில் தத்தளித்தன.
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம் பகுதிகளில், மழைநீர் கால்வாய் கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் தராததும், கால்வாய்களை இணைக்கவோ, தேவைப்படும் இடங்களில் புதிய கால்வாய்களை கட்டவோ நடவடிக்கை எடுக்காததுமே வெள்ள பாதிப்புக்கு காரணம். இப்பகுதிகள், மாநகராட்சியுடன் இணைக்கப்படும், இன்னமும் பேரூராட்சி போன்றே உள்ளன.
மாநகராட்சியில், 38 கோடி ரூபாய் செலவில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளன. இப்பணியை முறையாக திட்டமிட்டு, முழுவதுமாக முடிக்காததும் வெள்ள பாதிப்பு காரணம் என்று, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல்லாவரம்- ஆலந்துார் சட்டசபை தொகுதிகளின் எல்லையில் உள்ள மூவரசம்பட்டு ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், மேடவாக்கம், பள்ளிக்கரணை ஏரிக்கு செல்ல போதிய கால்வாய் இல்லை. இதன் காரணமாக, தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலம், 18 மற்றும் 20 வது வார்டுகளில் அடங்கிய, கே.ஜி.கே., நகர், பிருந்தாவனம் நகர், ஜெயலட்சுமி நகர், யசோதா நகர், காந்தி நகர், தேன்மொழி நகர், மேடவாக்கம் மெயின்ரோடு பகுதிகளில் ஒவ்வொரு மழையிலும் வெள்ளம் தேங்குகிறது.
மூவரசம்பட்டு ஏரி கலங்கல் பகுதியில் இருந்து மூடுகால்வாய் அமைத்து, அதன் வழியாக உபரி நீரை மேடவாக்கம் மற்றும் நாராயணபுரம் ஏரிகளுக்கு கொண்டு சென்றால் மட்டுமே, இதற்கு தீர்வு கிடைக்கும்.