/உள்ளூர் செய்திகள்/தேனி/தேக்கம்பட்டியில் ரூ. 56 கோடி தகைசால் பள்ளி கட்டடம்தேக்கம்பட்டியில் ரூ. 56 கோடி தகைசால் பள்ளி கட்டடம்
தேக்கம்பட்டியில் ரூ. 56 கோடி தகைசால் பள்ளி கட்டடம்
தேக்கம்பட்டியில் ரூ. 56 கோடி தகைசால் பள்ளி கட்டடம்
தேக்கம்பட்டியில் ரூ. 56 கோடி தகைசால் பள்ளி கட்டடம்
ADDED : ஜன 12, 2024 06:35 AM
தேனி : தேக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் தகைசால் பள்ளிக்கு ரூ.56 கோடி செலவில் கட்டங்கள் கட்டுவதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது.
தேக்கம்பட்டி பாலிடெக்னிக் கட்டத்தில் ஜூலை முதல் அரசு தகைசால் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ், ஆங்கில வழியில் பிளஸ் 1 மாணவர்கள் 240 பேர் பயில்கின்றனர். இவர்களுக்கு நீட், ஜே.இ.இ., தேர்விற்கு தயாராகும் வகையில் தனிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் அங்கேயே தங்கி பயின்று வருகின்றனர்.சில ஆண்டுகளில் 9ம் வகுப்பு முதல் இங்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.இப்பள்ளிக்கு ரூ. 56 கோடியில் கட்டடங்கள், ஸ்மார்ட் கிளாஸ், நவீன ஆய்வகங்கள், நுாலகம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இதற்காக தேக்கம்பட்டியில் உள்ள அரசு நிலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அங்கு கட்டுமானப் பணிகள் துவங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது.