போலீஸ் அதிகாரியை இளம்பெண்' பளார்' விட்டது ஏன் ?
போலீஸ் அதிகாரியை இளம்பெண்' பளார்' விட்டது ஏன் ?
போலீஸ் அதிகாரியை இளம்பெண்' பளார்' விட்டது ஏன் ?
ADDED : ஜூலை 12, 2024 08:34 AM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரியை பளார் என ஓங்கி அறைந்த பெண்ணை கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதன் காரணம் குறித்து இரு தரப்பு தகவல்கள் பரவுகிறது.
ஜெய்பூர் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பணியாற்றும் பணிப்பெண் வந்த போது ஒரு நுழைவுவாயில் பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். இவரிடம் உரிய அடையாள அட்டை இல்லாததால் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நேரத்தில் அங்கு பணியில் இருந்த உதவி சப் இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமுற்ற இந்த பெண் போலீஸ் அதிகாரியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். இதில் அவர் நிலைகுலைந்து திடுக்கிட்டு போனார்.
தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ' பணி முடிந்ததும் எனது வீட்டிற்கு வந்து என்னை சந்திக்குமாறு சப்-இன்ஸ்பெக்டர் கூறினார் என அந்த பெண் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உண்மை குறித்து முழுவிவரம் விரைவில் வெளிவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.