/உள்ளூர் செய்திகள்/தேனி/பஞ்சு விலை குறைவால் விளைச்சல் அதிகரித்தும் பயனில்லை! ஆண்டிபட்டி பருத்தி சாகுபடி விவசாயிகள் கவலைபஞ்சு விலை குறைவால் விளைச்சல் அதிகரித்தும் பயனில்லை! ஆண்டிபட்டி பருத்தி சாகுபடி விவசாயிகள் கவலை
பஞ்சு விலை குறைவால் விளைச்சல் அதிகரித்தும் பயனில்லை! ஆண்டிபட்டி பருத்தி சாகுபடி விவசாயிகள் கவலை
பஞ்சு விலை குறைவால் விளைச்சல் அதிகரித்தும் பயனில்லை! ஆண்டிபட்டி பருத்தி சாகுபடி விவசாயிகள் கவலை
பஞ்சு விலை குறைவால் விளைச்சல் அதிகரித்தும் பயனில்லை! ஆண்டிபட்டி பருத்தி சாகுபடி விவசாயிகள் கவலை
ADDED : ஜன 12, 2024 06:33 AM

ஆண்டிபட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி விவசாயமாக சிறுதானியம், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள் சாகுபடிக்கு அடுத்தபடியாக அதிகளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். இறவை பாசனத்திலும் தக்காளி,வெங்காயம், காய்கறிகள் சாகுபடிக்கு மாற்றாக பருத்தி சாகுபடி செய்துள்ளனர். மூன்று மாதத்திற்கு முன் விதைப்பு செய்த பருத்தி செடிகளில் தற்போது காய்கள் அதிகம் எடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக ஆண்டிபட்டி பகுதியில் வெயில் தாக்கம் இல்லை. பருத்தி செடிகளில் விளைந்த காய்கள் காய்ந்து வெடிப்பதற்கு வெயில் அவசியம். ஏற்கனவே வெடித்த காய்களில் பிரித்தெடுக்கும் பஞ்சில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் உலர்த்த முடியவில்லை. பிரித்தெடுக்கும் பஞ்சுக்கான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வெயில் குறைவால் வெடிக்காத காய்கள்
பருத்தி சாகுபடி விவசாயிகள் கூறியதாவது:ஆண்டிபட்டி பகுதியில் சித்தையகவுண்டன்பட்டி, ஏத்தக்கோயில், மறவபட்டி, மொட்டனூத்து உள்ளிட் பல கிராமங்களில் வளர்ந்த செடிகளில் தற்போது பருத்தி காய்கள் அதிகம் எடுத்துள்ளன. இப் பகுதியில் கடந்த சில வாரங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் முதிர்ந்த காய்களில் பஞ்சு பிரித்தெடுக்க முடியவில்லை. முற்றிய காய்களும் வெயில் இன்மையால் வெடிப்பதில்லை. இதனால் பஞ்சு பிரித்தெடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எடுத்த பஞ்சை உலர வைக்கவும் முடியவில்லை. கடந்த ஆண்டு பஞ்சுக்கான விலை கிலோ ரூ.70 முதல் 80 வரை கிடைத்தது. தற்போது கிலோ ரூ.50 முதல் 60 வரை உள்ளது. பருத்தி சாகுபடியில் உரம், பூச்சி மருந்து செலவு அதிகமாகிறது. செலவுக்கு ஏற்ற விலை பஞ்சில் கிடைக்கவில்லை என்றனர்.
விலை உயர வாய்ப்பு
வேளாண் துறையினர் கூறியதாவது: ஆண்டிபட்டி பகுதியில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான அளவில் பருத்தி சாகுபடி உள்ளது. கடந்த ஆண்டை விட தற்போது விளைச்சல் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகமானால் காய்கள் வெடித்து பஞ்சு வரத்து அதிகமாகும். பஞ்சுக்கான சீசன் இன்னும் துவங்கவில்லை. வெயிலுக்குப்பின் பஞ்சின் தரம் உயரும் போது விலையும் உயர வாய்ப்புள்ளது இவ்வாறு தெரிவித்தனர்.