ADDED : ஜன 12, 2024 04:08 AM
விருத்தாசலம்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, மங்கலம்பேட்டையில், பஜ்ரங்கி சேவாலயம் சார்பில் 9ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு, பட்டாபி ராமர் ஆலய நிர்வாகி கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.
பா.ஜ., மாவட்ட தலைவர் மணிகண்டன், பா.ஜ., உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ஜெயச்சந்திரன், பிரச்சார பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கலந்துகொண்டு, அனுமன் சிலை ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார் தலைமையில், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.