/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மக்களுடன் முதல்வர் திட்டம்; 5 அரசுத்துறைகள் ஆப்சென்ட்மக்களுடன் முதல்வர் திட்டம்; 5 அரசுத்துறைகள் ஆப்சென்ட்
மக்களுடன் முதல்வர் திட்டம்; 5 அரசுத்துறைகள் ஆப்சென்ட்
மக்களுடன் முதல்வர் திட்டம்; 5 அரசுத்துறைகள் ஆப்சென்ட்
மக்களுடன் முதல்வர் திட்டம்; 5 அரசுத்துறைகள் ஆப்சென்ட்
ADDED : ஜன 12, 2024 12:20 AM
தொண்டி : தொண்டியில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில் ஐந்து அரசுத்துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளாததால் மனு அளிக்க வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தொண்டி பேரூராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தனியார் மகாலில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., கோபு துவக்கி வைத்தார். தாசில்தார் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு, செயல் அலுவலர் மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் சுகாதாரத்துறை, வீட்டு வசதி, காவல் துறை, சமூகநலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வருவாய்த்துறை, மின்வாரியம், பேரூராட்சி, இ-சேவை மையம், அரசு கட்டுமானம் மற்றும் ஓட்டுநர் அமைப்பு சாரா நல வாரியம், வாழ்வாதர கடன் உதவி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை போன்ற அரசுத்துறை சார்பில் தனித் தனியாக இடம் ஒதுக்கப்பட்டு அலுவலர்கள் நியமிக்கபட்டனர்.
இதில் கல்வித்துறை, வேளாண் துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால்வாரியம் போன்ற ஐந்து அரசுத்துறையினர் வரவில்லை. இதனால் இந்த துறை சம்பந்தமாக குறைகளை கூற வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
முகாமில் மனு அளிக்க வந்தவர்களின் மனுக்களைஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் சர்வர் பிரச்னையால் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் மனு அளிக்க வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.