ADDED : ஜன 12, 2024 04:08 AM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பரங்கிப்பேட்டை அடுத்த ஆதிவராகநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன், 30; பைக் மெக்கானிக். இவருக்கும்,பு.முட்லுாரை சேர்ந்த ராஜஸ்ரீக்கும், 23; என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு,இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.இந்நிலையில், ராஜஸ்ரீ அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த ராஜஸ்ரீ நேற்று வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து்கொண்டார்.
இதுகுறித்து, ராஜஸ்ரீயின் தாய் லதா கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.