/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/டூ - வீலரில் சென்ற வாலிபர் மீடியனில் மோதி உயிரிழப்புடூ - வீலரில் சென்ற வாலிபர் மீடியனில் மோதி உயிரிழப்பு
டூ - வீலரில் சென்ற வாலிபர் மீடியனில் மோதி உயிரிழப்பு
டூ - வீலரில் சென்ற வாலிபர் மீடியனில் மோதி உயிரிழப்பு
டூ - வீலரில் சென்ற வாலிபர் மீடியனில் மோதி உயிரிழப்பு
ADDED : ஜன 12, 2024 12:03 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மேலேரிப்பாக்கம் மலையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பரத், 22. இவர், கடந்த 9ம் தேதி இரவு, தன் 'டியோ' இருசக்கர வாகனத்தில், செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் சென்றார்.
திருப்போரூர் கூட்டு சாலை அருகில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையின் மையத்தடுப்பில் மோதியது.
படுகாயமடைந்த பரத்தை, சக வாகன ஓட்டிகள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.