/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/15ம் தேதி வேலைவாய்ப்பு சந்தைதனியார் வேலைநாடுனர்களுக்கு அழைப்பு15ம் தேதி வேலைவாய்ப்பு சந்தைதனியார் வேலைநாடுனர்களுக்கு அழைப்பு
15ம் தேதி வேலைவாய்ப்பு சந்தைதனியார் வேலைநாடுனர்களுக்கு அழைப்பு
15ம் தேதி வேலைவாய்ப்பு சந்தைதனியார் வேலைநாடுனர்களுக்கு அழைப்பு
15ம் தேதி வேலைவாய்ப்பு சந்தைதனியார் வேலைநாடுனர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 13, 2011 01:38 AM
திருநெல்வேலி:நெல்லையில் வரும் 15ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு சந்தை
நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்து வேலைக்காக காத்திருக்கும் பதிவுதாரர்களின் விபரங்கள் பொது துறை
மற்றும் அரசு உதவி பெறும் தனியார் நிறுவனங்களில் இருந்து பெறப்படும் பணிக்
காலியிடங்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டு
வருகிறது.
இதுதவிர மேலும் ஒரு சிறப்பு நடவடிக்கையாக தனியார் துறையில்
ஏற்படும் காலியிடங்களுக்கும் அவரவர் விருப்பத்திணங்க தகுதியான நபர்களை
தேர்வு செய்ய ஏதுவாக ஒவ்வொரு மாதமும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
தனியார் வேலைவாய்ப்பு சந்தை நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மாதத்திற்கான நிகழ்ச்சி வரும் 15ம் தேதி மதியம் 2.30 மணிக்கு
நடக்கிறது.இதில் தனியார் துறை வேலையளிப்போரும், வேலை வேண்டுவோரும்
நேருக்கு நேர் சந்தித்து தேர்வு செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு
வருகிறது. தனியார் துறையை சேர்ந்த வேலையளிப்போர் இந்நிகழ்ச்சியில் கலந்து
கொண்டு தங்களுக்கு தேவையான வேலை வேண்டுவோரை தேர்வு செய்யலாம்.தனியார்
துறையில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் பதிவுதாரர்களும் இதில் கலந்து
கொண்டு பயனடையலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நடராஜன்
தெரிவித்தார்.