/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ விபத்தில் மாணவர் பலி; பிறந்த நாளில் சோகம் விபத்தில் மாணவர் பலி; பிறந்த நாளில் சோகம்
விபத்தில் மாணவர் பலி; பிறந்த நாளில் சோகம்
விபத்தில் மாணவர் பலி; பிறந்த நாளில் சோகம்
விபத்தில் மாணவர் பலி; பிறந்த நாளில் சோகம்
ADDED : மார் 12, 2025 01:19 AM

திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே பல்கலை மாணவர்கள் இருவர் மழையின் போது டூ - வீலரில் சென்று விபத்தில் சிக்கினர். இதில், பிறந்த நாளன்றே மாணவர் ஒருவர் பலியானார்.
திருநெல்வேலி மாவட்டம், மானுாரில் நேற்று காலை பலத்த மழை பெய்தது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் சைபர் செக்யூரிட்டி பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்த ஊத்துமலை, ரெட்டியார்பட்டியை சேர்ந்த இன்பராஜ், 21, கதிர், 21, ஆகியோர் டூ - வீலரில் சென்றனர்.
கதிர், டூ - வீலரை ஓட்டினார். மானுார் அருகே மாவடி விலக்கு பகுதியில் வந்தபோது, கதிரின் மொபைல் போன் மழையில் நனைந்தது. அதை எடுக்க முயன்றார். இதனால், டூ - வீலர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், பின்புறம் இருந்த இன்பராஜ் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். நேற்று அவரது பிறந்தநாள். கதிர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மானுார் போலீசார் விசாரிக்கின்றனர்.