/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ தொழில் தொடங்குவதாகக் கூறி ரூ13.8 லட்சம் மோசடி ராணுவ வீரர், பேராசிரியர் உட்பட 7 பேர் மீது வழக்கு தொழில் தொடங்குவதாகக் கூறி ரூ13.8 லட்சம் மோசடி ராணுவ வீரர், பேராசிரியர் உட்பட 7 பேர் மீது வழக்கு
தொழில் தொடங்குவதாகக் கூறி ரூ13.8 லட்சம் மோசடி ராணுவ வீரர், பேராசிரியர் உட்பட 7 பேர் மீது வழக்கு
தொழில் தொடங்குவதாகக் கூறி ரூ13.8 லட்சம் மோசடி ராணுவ வீரர், பேராசிரியர் உட்பட 7 பேர் மீது வழக்கு
தொழில் தொடங்குவதாகக் கூறி ரூ13.8 லட்சம் மோசடி ராணுவ வீரர், பேராசிரியர் உட்பட 7 பேர் மீது வழக்கு
ADDED : மார் 13, 2025 02:46 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி பழைய பேட்டை கிருஷ்ணபேரியைச் சேர்ந்த அன்பரசன் 28, கடலோர பாதுகாப்பு படையில் வீரர். இவரது உறவினர் மாரியப்பன் ராணுவ வீரர். தச்சநல்லுார் முன்னாள் ராணுவ வீரர் கனகராஜ்.
பால பாக்யாநகர் முனியசாமி, வி.ஏ.ஓ., முருகேசன் ரயில்வே ஊழியர் கோமதி சங்கர், பேராசிரியர் கணேசன் கங்கைகொண்டான் சிப்காட்டில் தொழில் தொடங்குவதாகக் கூறினர்.
அதில் அன்பரசன் பங்குதாரராக சேர ரூ.8.8 லட்சம் கொடுத்தார். இதேபோல் கட்டட கான்ட்ராக்டர் ராஜ் 30, என்பவரிடமும் ரூ.5 லட்சம் வாங்கினர். தொழில் தொடங்கியதும் அவர்களை பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாக உறுதியளித்தனர்.
ஆனால், பல மாதங்கள் கடந்தும் தொழில் தொடங்கப்படாததால், இருவரும் பணத்தை திருப்பித்தருமாறு கேட்டனர். பணம் வழங்க மறுத்ததுடன், கனகராஜ் உள்ளிட்டோர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
தச்சநல்லுார் போலீசில் அன்பரசன், ராஜ் தனித்தனியாக புகார் அளித்தனர். இதனையடுத்து கனகராஜ், மாரியப்பன், மாரியப்பன் மனைவி பிரியா, முனியசாமி, முருகேசன், கோமதி சங்கர், கணேசன் ஆகிய ஏழு பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராஜ் அளித்த புகாரில் பிரியாவை தவிர்த்து ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தச்சநல்லுார் போலீசார் மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.