/உள்ளூர் செய்திகள்/மதுரை/பாரம்பரியம், பறவைகளை பாதுகாக்க சூழலியல் ஆய்வாளர்கள் 12 கோரிக்கைகள்பாரம்பரியம், பறவைகளை பாதுகாக்க சூழலியல் ஆய்வாளர்கள் 12 கோரிக்கைகள்
பாரம்பரியம், பறவைகளை பாதுகாக்க சூழலியல் ஆய்வாளர்கள் 12 கோரிக்கைகள்
பாரம்பரியம், பறவைகளை பாதுகாக்க சூழலியல் ஆய்வாளர்கள் 12 கோரிக்கைகள்
பாரம்பரியம், பறவைகளை பாதுகாக்க சூழலியல் ஆய்வாளர்கள் 12 கோரிக்கைகள்
ADDED : ஜன 12, 2024 06:52 AM
ஒத்தக்கடை : மதுரையில் பாரம்பரியஅடையாள சின்னங்களையும், பறைவைகளையும் காத்திட சூழலியல், தொல்லியல் துறையினர் கலெக்டர் சங்கீதாவிடம், 12 கோரிக்கைள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.
கோயில் கட்டடக்கலை, சிற்பத்துறை ஆய்வாளர் தேவி கூறியதாவது:
மதுரையில் முதல் பறவைகள் சரணாலயம், வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா, நரசிங்கம்பட்டி ஈமக்காடை தொல்லியல் சின்னமாக அறிவிக்க வேண்டும். கிடாரிப்பட்டி உள்பட பாறை ஓவியங்களை பாதுகாக்கவும், இடையப்பட்டி கோயில்காட்டை ஆய்வு செய்து பல்லுயிர் தளமாக அறிவித்திடவும், மதுரை வாசிமலை, எழுமலை வனப்பகுதியில் யானைகளின் வழித்தடத்தை ஆய்வு செய்யவும் வேண்டும்.
சிதிலமடைந்துள்ள விராதனூர் கருங்காலக்குடி சிவன்கோயில், பாலமேடு மறவபட்டி பெருமாள் கோயில், அலங்காநல்லுார் குட்டிமேய்க்கிப்பட்டி பெருமாள் கோயில், இடையப்பட்டி தெற்காமூர் சாலையில் உள்ள கல்வெட்டு உள்ளிட்ட பிற்கால பாண்டியர்கால கோயில்கள், கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டும்.
சிவரக்கோட்டை, நேசனேரி உள்ளிட்ட கள்ளிக்குடி பகுதியில் புள்ளிமான், மரநாய், புனுகுப்பூனை, முள்ளம்பன்றி, உடும்பு உள்ளிட்ட காட்டுயிர்களை ஆவணப்படுத்தி அப்பகுதியை முல்லைத் திணை வாழ் உயிரின சரணாலயமாக அறிவிக்க வேண்டும்.
மீன்பிடி இல்லாத கோயில் குளங்களில், இயல்வகை நன்னீர் மீன்களை வளர்த்திடவும், வனத்துறை மரக்கன்று பண்ணைகளில் இயல் தாவரங்களுக்கென்று தனியான இடம் ஒதுக்கவும், காட்டுயிர்களுக்கான புனர்வாழ்வு மையம் அமைக்க வேண்டும் என்பது போன்ற 12 கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்துள்ளோம், என்றார்.