/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/'கிரிப்டோகரன்சி' நிலைப்பாடு ஆர்.பி.ஐ. கவர்னர் கறார்'கிரிப்டோகரன்சி' நிலைப்பாடு ஆர்.பி.ஐ. கவர்னர் கறார்
'கிரிப்டோகரன்சி' நிலைப்பாடு ஆர்.பி.ஐ. கவர்னர் கறார்
'கிரிப்டோகரன்சி' நிலைப்பாடு ஆர்.பி.ஐ. கவர்னர் கறார்
'கிரிப்டோகரன்சி' நிலைப்பாடு ஆர்.பி.ஐ. கவர்னர் கறார்
ADDED : ஜன 11, 2024 11:35 PM

மும்பை:கிரிப்டோகரன்சி எனும் மெய்நிகர் நாணய பரிவர்த்தனை குறித்த ஒழுங்குமுறைகளில், மற்ற நாடுகளை ரிசர்வ் வங்கி பின்பற்றாது என்று, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார்.
மேலும், பிற சந்தைகளுக்கு நன்மையாக விளங்கும் ஒன்று, நம் சந்தைக்கு நன்மை பயக்காமல் போக வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
கிரிப்டோ கரன்சிகளை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடும் தன்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடும் இதுவே என்றும் அவர் கூறினார்.
சமீபத்தில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், அங்கு பிட்காயின் இ.டி.எப்.,களை அறிமுகப்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சக்திகாந்த தாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட், பணவீக்கத்தை அதிகரிக்கக் கூடிய வகையில் அமையாது என்று கருதுவதாக கூறிய அவர், ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கியது முதல், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டினார்.
பிற சந்தைகளுக்கு நன்மையாக விளங்கும் ஒன்று, நமது சந்தைக்கு நன்மை பயக்காமல் போக வாய்ப்புள்ளது