/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழில்நுட்ப கோளாறால் அரவை நிறுத்தம் வரிசைகட்டி காத்திருக்கும் கரும்பு லாரிகள்படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழில்நுட்ப கோளாறால் அரவை நிறுத்தம் வரிசைகட்டி காத்திருக்கும் கரும்பு லாரிகள்
படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழில்நுட்ப கோளாறால் அரவை நிறுத்தம் வரிசைகட்டி காத்திருக்கும் கரும்பு லாரிகள்
படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழில்நுட்ப கோளாறால் அரவை நிறுத்தம் வரிசைகட்டி காத்திருக்கும் கரும்பு லாரிகள்
படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழில்நுட்ப கோளாறால் அரவை நிறுத்தம் வரிசைகட்டி காத்திருக்கும் கரும்பு லாரிகள்
ADDED : ஜன 11, 2024 08:58 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த படாளத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 21 நாள் உற்பத்தி நடைபெற்ற நிலையில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக, அரவைப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மதுராந்தகம் அடுத்த படாளத்தில், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில், கடந்த டிசம்பர் 15ல், உற்பத்தி துவங்கப்பட்டது.
அரவைப் பணி, 21 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக, ஓடுகள் கொண்டு வேயப்பட்ட ஆலையில், ஓடுகள் உடைந்து சேதம் அடைந்த பகுதி வழியாக மழை நீர் வழிந்து, இயந்திரங்கள் பழுதாகி உள்ளன.
இதனால், கடந்த ஐந்து நாட்களாக, தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், ஆட்கள் பற்றாக்குறை காரணமாகவும், ஆலையை இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டு, கரும்பு அரவைப் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, மீண்டும் நேற்று முன்தினம் ஆலையை இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், அரைக்கப்பட்ட கரும்பு சாறு அதிக அளவில் வெளியேறியதால், மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால், அரவை செய்யப்பட்ட 700 டன் கரும்பு சாறு, சர்க்கரையாக மாற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கான தொழில் நுட்ப பணி செய்யும் ஆட்கள் தினக்கூலி பணியில் இருப்பதால், கூலி பற்றாக்குறை காரணமாகவே, அவர்கள் வேலையில் இருந்து நின்று விடுகின்றனர்.
இதன் காரணமாக, ஆலையில் அரைக்கப்பட்ட 700 டன் கரும்பு சாறும், அப்படியே பாலாற்றில் திறந்து விடப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், விழுப்புரம், வானுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து கரும்புகள் ஏற்றி வந்து இறக்குமதி செய்வதற்காக ஆலை வளாகம் மற்றும் சாலைகளில் காத்திருக்கும் லாரி மற்றும் டிராக்டர் வாகன ஓட்டுனர்கள், கடந்த நான்கு நாட்களாக உணவின்றி, இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர்.
இது குறித்து, லாரி ஓட்டுனர் சண்முகம், 50, கூறியதாவது:
இதே நிலைமை நீடித்தால், பொங்கல் கொண்டாட முடியாத நிலை ஏற்படும். ஆலை மீண்டும் உற்பத்தியை துவக்கினால் கூட, 300-க்கும் மேற்பட்ட லாரிகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், அரவைக்கு மேலும் தாமதமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து தகவலறிய, ஆலை நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது, அழைப்பை ஆலை நிர்வாகம் ஏற்கவில்லை.