/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஒரே மாதத்தில் 225 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்துஒரே மாதத்தில் 225 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
ஒரே மாதத்தில் 225 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
ஒரே மாதத்தில் 225 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
ஒரே மாதத்தில் 225 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
ADDED : ஜன 11, 2024 10:48 PM
சேலம்:சேலம் போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில் சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆத்துார், சங்ககிரி, மேட்டூர், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், ஓமலுார், வாழப்பாடி, பாலக்கோடு, அரூர் ஆகிய, பகுதி நேர அலுவலகங்கள் செயல்படுகின்றன.
கடந்த டிசம்பரில், 11 அலுவலக பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் குழுவினர், 1,621 வாகனங்களில் சோதனை மேற்கொண்டனர். அதில் சாலைவிதிகளை மீறிய, 225 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டது.
போதையில் வாகனம் ஓட்டிய, 47 பேர், மொபைலில் பேசியபடி ஓட்டிய, 42 பேர், அதிவேகத்தில் சென்ற, 36 பேர், சிக்னலை தாண்டிய, 33 பேர், விபத்து உயிரிழப்பு ஏற்படுத்திய, 25 பேர், அதிக ஆட்கள் ஏற்றிய, 27 பேர் உள்ளிட்டவை அடங்கும்.
தவிர அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றியது, 'சீட் பெல்ட்' அணியாதது, முகப்பு விளக்கை அதிக வெளிச்சத்துடன் ஒளிரவிட்டது, அதிக சத்தம் எழுப்பிய ஏர்ஹாரன் போன்ற பல்வேறு விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு, 53.26 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அதில், 27.70 லட்சம் ரூபாய் உடனே வசூலிக்கப்பட்டது.
மேலும், 9.35 லட்சம் ரூபாய் சாலை வரியும் வசூலானது. அத்துடன் எப்.சி., - பர்மிட் இல்லாத, 177 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.