4 செக்யூரிட்டிகள் 'சஸ்பெண்ட்!'
மாரிகுப்பம் பகுதியில், 'மாஜி' கவுன்சிலர் இருக்கிற வரைக்கும் அடங்கி கிடந்தவங்க, அவர் இல்லாததால் மைனிங் பகுதியில் கொள்ளையடிக்க,'தாதா' வேலையை தொடங்கிட்டாங்களாம்.
தலைவர் பெயரை மறைக்கலாமா?
கர்நாடக மாநில தலைநகர் சிட்டி ரயில் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட தியாகி பெயரை இணைத்தாங்க. அதை அமல்படுத்திட்டாங்க. ரயில்கள் வந்து, செல்லும் போதெல்லாம் அறிவிப்பின் போது அந்த 'மூன்றெழுத்து' தியாகி பெயரை தவறாமல் உச்சரிக்கிறாங்க.
செங்கொடி சங்கம் யாருக்கு?
எம்ப்ளாய்ஸ் யூனியன் பேர்ல இருக்கிற செங்கொடி கட்சியின் யூனியனை,முறையாக அந்த கட்சிக்காரங்க தொழிலாளர் ஆணையத்தில், 'ரினிவல்' செய்யாமல் போனதால், அதன் உரிமையை இழந்துட்டாங்களாம். ஆனாலும், அந்த கட்சியில் ஒதுங்கி இருக்கும் ஒரு தொழிலாளி, சங்கத்தை ரினிவல் செய்து அவர் சார்ந்த குழுவுக்கு தான் சொந்தமுன்னு அங்கீகாரம் வாங்கிட்டாராம்.
கோவில் கொள்ளைக்கு ஆப்பு!
ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்டது உ.பேட்டையில் 1,000 ஆண்டு பழமையான கோவில். இதனை அரசு ஏற்று 30 ஆண்டுகள் ஆகிறது. இக்கோவிலின் வரவு, செலவு என்னானதென யாருக்குமே தெரியாமல் இருந்தது. அறநிலையத் துறையின் தாசில்தாராக பதவியில் இருப்பவர்களுக்கு கூட இக்கோவில் பற்றி அக்கறை இருந்ததாக தெரியவில்லை என, உண்மை அறிந்த, 'பக்தர்கள் குரல்'ஒலிக்க தொடங்கியது.