/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ கணவன், 6 பிள்ளைகளை தவிக்கவிட்டு பிச்சைக்காரருடன் ஓடிப்போன மனைவி கணவன், 6 பிள்ளைகளை தவிக்கவிட்டு பிச்சைக்காரருடன் ஓடிப்போன மனைவி
கணவன், 6 பிள்ளைகளை தவிக்கவிட்டு பிச்சைக்காரருடன் ஓடிப்போன மனைவி
கணவன், 6 பிள்ளைகளை தவிக்கவிட்டு பிச்சைக்காரருடன் ஓடிப்போன மனைவி
கணவன், 6 பிள்ளைகளை தவிக்கவிட்டு பிச்சைக்காரருடன் ஓடிப்போன மனைவி
ADDED : ஜன 08, 2025 12:43 AM

ஹர்தோய்: உத்தர பிரதேசத்தில், கணவன் மற்றும் ஆறு பிள்ளைகளை தவிக்கவிட்டு பிச்சைக்காரருடன் ஓடிப்போன பெண்ணை போலீசார் மீட்டனர்.
உ.பி.,யின் ஹர்தோய் மாவட்டம், ஹர்பல்புர் பகுதியை சேர்ந்தவர் ராஜு, 45. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஆறு குழந்தைகளும் உள்ளனர்.
மொபைல் போன்
ராஜேஸ்வரி கடந்த 3ம் தேதி காணாமல் போனார். இது தொடர்பாக, போலீசில் ராஜு புகார் அளித்தார்.
அதன் விபரம்: நான் வசிக்கும் ஹர்பல்புர் பகுதிக்கு, 45 வயதான நான்ஹே பண்டிட் என்ற நபர் அடிக்கடி பிச்சை எடுக்க வருவார். என் வீட்டினரும் பிச்சை அளிப்பர். அப்போது என் மனைவி ராஜேஸ்வரியுடன் பிச்சைக்காரர் நான்ஹே பேசி பழகி உள்ளார். 'மொபைல் போன்' வாயிலாக தொடர்பு கொண்டும் பேசியுள்ளார்.
காய்கறி வாங்க, கடந்த 3ம் தேதி மார்க்கெட் சென்ற என் மனைவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வீட்டில் இருந்த எருமை மாட்டை விற்று வைத்திருந்த பணத்தை என் மனைவி எடுத்துச் சென்றுள்ளார்.
என் மனைவியின் மனதை மாற்றி பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது. ஆறு பிள்ளைகளை தவிக்கவிட்டு சென்றுவிட்டார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
வாக்குமூலம்
வழக்குப்பதிவு செய்த போலீசார், ஓடிப்போன ராஜேஸ்வரியை மீட்டனர். அவரிடம் வாக்குமூலம் பெறும் பணி நடக்கிறது. தலைமறைவான பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட்டை தேடி வருகின்றனர்.