Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/370-வது சட்டப்பிரிவு நீக்கம் குறித்து கலந்துரையாடல்: தினமலரில் சிறப்பு வீடியோ

370-வது சட்டப்பிரிவு நீக்கம் குறித்து கலந்துரையாடல்: தினமலரில் சிறப்பு வீடியோ

370-வது சட்டப்பிரிவு நீக்கம் குறித்து கலந்துரையாடல்: தினமலரில் சிறப்பு வீடியோ

370-வது சட்டப்பிரிவு நீக்கம் குறித்து கலந்துரையாடல்: தினமலரில் சிறப்பு வீடியோ

UPDATED : ஜன 13, 2024 10:41 AMADDED : ஜன 12, 2024 06:44 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை, மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு நீக்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும்படியாகும் என தீர்ப்பளித்தது.

இந்நிலையில், பா.ஜ., சிந்தனையாளர் பிரிவு சார்பில் சென்னையில் நேற்று நடந்த காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டது குறித்த கருத்தரங்கம் நேற்று சென்னையில் நடந்தது.

இந்த கலந்துரையாடலில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மூத்த பத்திரிகையாளர் மாலன் நாராயணன், எழுத்தாளரும் கட்டுரையாளருமான கேஎஸ் ராதாகிருஷ்ணன், காமராஜர் மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, வழக்கறிஞர் ஷெல்வி கே. தாமோதர், பா.ஜ., தேசியச் செயலர் அனில் ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சொர்க்க பூமி

மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே பேசும்போது, பயங்கரவாதத்தின் நுழைவாயிலை சுற்றுலாவின் சொர்க்கபூமி ஆக்கியவர் பிரதமர் மோடி என கூறியுள்ளார். இது குறித்த சிறப்பு தொகுப்பு தினமலர் யூடியூப் பக்கத்தில் சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

அதனைக் காண:

https://www.youtube.com/watch?v=IGGECQWp8tc



'காஷ்மீருக்காக பா.ஜ., கொடுத்த விலை அதிகம்'


பா.ஜ., சிந்தனையாளர் பிரிவு சார்பில் சென்னையில் நேற்று நடந்த காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டது குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசியதாவது: கடந்த 1991ல் காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்ற அன்றைய பா.ஜ., தலைவர் முரளி மனோகர் ஜோஷி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஏக்தா யாத்திரை நடத்தினர். அந்த யாத்திரைக்கு பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் இன்றைய பிரதமர் மோடி. அவரது அரசியல் வாழ்வில் காஷ்மீர் யாத்திரை பெரும் திருப்புமுனை. அதனால் மிகவும் துணிவுடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கினார். இந்தியா விடுதலை அடைந்தபோது காஷ்மீருக்கு மட்டும் தனி அந்தஸ்து அளிக்கப்பட்டது. ஒரே நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள். இந்தியர்களுக்கு காஷ்மீரில் எந்த உரிமையும் இல்லாத நிலை இருந்தது. காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்பதைவிட காஷ்மீரின் தலைவர் ஷேக் அப்துல்லாவுக்கு, நாட்டின் முதல் பிரதமர் நேரு முக்கியத்துவம் கொடுத்தார்.அதுவே, காஷ்மீர் பிரச்னைக்கு காரணம். 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின் முதல் இரண்டு ஆண்டுகளில் பா.ஜ.,வைச் சேர்ந்த 23 பேர் கொல்லப்பட்டனர். காஷ்மீருக்காக பா.ஜ., கொடுத்த விலை அதிகம். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் இதுவரை காஷ்மீரில் 1559 நிறுவனங்கள் 66,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளன. இதன் வாயிலாக 2 லட்சத்து 93,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் அனைவருக்கும் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த வீடியோவைக் காண

: https://www.youtube.com/watch?v=73ANjMYQApE







      Our Apps Available On




      Dinamalar

      Follow us