ADDED : ஜன 12, 2024 06:43 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே ராஜக்காபட்டியில் மானுாத்து, ராமலட்சுமணபுரம், எம்.பாறைப்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், ஆவின் கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி நிலையம் இணைந்து ஜெர்சி இன மாடுகளின் கன்றுகள் அணிவகுப்பு நடந்தது.
ஆவின் பொது மேலாளர் சிவகாமி, ராஜக்காபட்டி ஊராட்சித்தலைவர் சித்ராபால்ராஜ், சார்பதிவாளர் (பால்வளம்) ராமச்சந்திரன், ஆவின் மேலாளர் பாலயோகினி, கால்நடை மருத்துவர் செல்வேந்திரன் பங்கேற்றனர்.
ஒன்னரை வயது வரையில் நான்கு பிரிவுகளாக ஜெர்சி இன மாடுகளின் கன்றுகள் அணிவகுப்பு நடந்தது. ஆரோக்கியமாக வளர்க்கப்பட்ட கன்றுளை தேர்வு செய்து உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை மகேந்திரன், ஜெயபாண்டி, பெருமாள் செய்திருந்தனர்.