/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஜிடோ - ஜாக் அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்ஜிடோ - ஜாக் அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஜிடோ - ஜாக் அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஜிடோ - ஜாக் அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஜிடோ - ஜாக் அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 12, 2024 01:14 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வட்டாரக் கல்வி அலுவலகம் முன், கோரிக்கைகளை வலியுறுத்தி ஜிடோ - ஜாக் அமைப்பு சார்பில் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹென்ரி பவுல்ராஜ் பேசியதாவது:
இடைநிலை ஆசிரியர்களுக்கு, 2006 ஜன., 1 முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பதை, 3 நபர் குழுவிற்கு பரிந்துரைக்க வேண்டும். மாணவர்கள் வருகை பதிவு தவிர பிற அனைத்து வகையான பதிவேற்ற பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். எண்ணும், எழுத்தும் திட்டத்தில் ஆன்லைன் பதிவேற்றம் ரத்து செய்ய வேண்டும்.
உயர்கல்வி படித்த, 4,500 பேருக்கு பின்னேற்பு அனுமதி ஆணை வழங்க வேண்டும். 58 மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் பள்ளித்துறை ஆய்வர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டு, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், 58 பேருக்கு பணி மாற்றம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
வட்டார செயலாளர் நாராயணசாமி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ராவணன், மாவட்ட தலைவர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.