பசுமை ஹைட்ரஜன் ஏலம் ஒன்பது நிறுவனங்கள் தேர்வு
பசுமை ஹைட்ரஜன் ஏலம் ஒன்பது நிறுவனங்கள் தேர்வு
பசுமை ஹைட்ரஜன் ஏலம் ஒன்பது நிறுவனங்கள் தேர்வு
ADDED : ஜன 11, 2024 11:58 PM

புதுடில்லி,:பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி வசதிகளை அமைப்பதற்கான அரசின் ஊக்கத்தொகை திட்ட ஏலத்தில், 'ரிலையன்ஸ்' உட்பட, ஒன்பது நிறுவனங் கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
கடந்த ஜூலையில், அரசுக்கு சொந்தமான 'சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' நிறுவனம், 4.50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான, உற்பத்தி வசதிகளை அமைப்பதற்காக, நிறுவனங்களுக்கு ஏலம் விடுத்து இருந்தது.
இந்த உற்பத்தி வசதிகளை அமைக்கும் நிறுவனம், அரசின் ஊக்கத்தொகைக்கு தகுதி பெறும்.
அதன்படி முதற்கட்டத்தில், மொத்தம் ஒன்பது நிறுவனங்கள், வெற்றிகரமான ஏலதாரர்களாக தற்போது உருவெடுத்துள்ளன.
மேலும், இரண்டாம் கட்ட உற்பத்திக்கும் மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
பசுமை ஹைட்ரஜன் மாற்றத்துக்கான இந்த திட்டம், இந்தியாவை பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டது.
ரிலையன்ஸ் கிரீன் ஹைட்ரஜன்
ஏ.சி.எம்.இ., கிளீன்டெக் சொல்யுஷன்ஸ்
டோரன்ட் பவர்
எச்.எச்.பி.டூ.,
வெல்ஸ்பன் நியூ எனர்ஜி
ஜெ.எஸ்.டபுள்யு., நியோ எனர்ஜி
சி.இ.எஸ்.சி., புராஜெக்ட்ஸ்
யு.பி.எல்., லிமிடெட்
கிரீன்கோ ஜீரோசி