Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மஞ்சுவிரட்டு அனுமதி; உயர்நீதிமன்றம் உத்தரவு

மஞ்சுவிரட்டு அனுமதி; உயர்நீதிமன்றம் உத்தரவு

மஞ்சுவிரட்டு அனுமதி; உயர்நீதிமன்றம் உத்தரவு

மஞ்சுவிரட்டு அனுமதி; உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஜன 12, 2024 12:25 AM


Google News
மதுரை: சிவகங்கை மாவட்டம் இடையமேலுார் அருகே மங்காம்பட்டி அருள்ராயர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

பொங்கலையொட்டி மங்காம்பட்டியில் ஜன.,13 ல் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். இன்சூரன்ஸ் செய்துள்ளோம். அனுமதி, பாதுகாப்பு அளிக்கக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: வடமாடு மஞ்சுவிரட்டு நடத்துவதற்குரிய அரசாணையில் மனுதாரரின் கிராமம் இடம் பெறவில்லை. மனுதாரர் அரசை அணுகலாம். அதை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us