ADDED : ஜன 11, 2024 11:05 PM
பொள்ளாச்சி;உலக சாதனை யோகாசன போட்டியில், பொள்ளாச்சி மரப்பேட்டை வழி நகராட்சி பள்ளி மாணவி தங்கப்பதக்கம் பெற்றார்.
பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் பள்ளி, வி.எஸ்.டி., மார்சியல் ஆர்ட்ஸ் சார்பில், உலக சாதனை யோகாசன போட்டி நடந்தது. அதில், பொள்ளாச்சி மரப்பேட்டை வழி நகராட்சி நடுநிலைப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவி ரூபிகா, 8 வயது பிரிவில் பங்கேற்று சாதனை படைத்தார்.
சிறப்பு யோகாசனத்தில், 20 நிமிடம் நிலை நிறுத்தி சாதனை படைத்தார். அவருக்கு தங்கப்பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவியை, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.