Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி

ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி

ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி

ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி

ADDED : ஜன 12, 2024 12:11 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அனுமன் ஜெயந்தியையொட்டி, விழுப்புரம் திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து 7:00 மணிக்கு, ஆஞ்சநேயர் சுவாமி தங்கக் கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7:30 மணிக்கு தீபாராதனையும், இரவு 7.00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அதே போல், கிழக்கு பாண்டி ரோடு, தேவநாதசுவாமி நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் காலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், 6:00 மணிக்கு மங்கள வாத்தியம், 6:30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை, ஊஞ்சல் சேவை நடந்தது.

வண்டிமேடு, கே.வி.ஆர்., நகரில் அபிநவ மந்த்ராலயத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு காலை 11:00 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகமும், வெண்ணை அலங்காரத்திலும் சுவாமி அருள்பாலித்தார்.

விக்கிரவாண்டி


விக்கிரவாண்டி ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 8:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனமும், வடைமாலை, துளசி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதே போன்ற, செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை 8:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு வழிபாடும், மகா தீபாராதனையும் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us