கண்மாயில் குப்பை: உயர்நீதிமன்றம் தடை
கண்மாயில் குப்பை: உயர்நீதிமன்றம் தடை
கண்மாயில் குப்பை: உயர்நீதிமன்றம் தடை
ADDED : ஜன 12, 2024 06:53 AM
மதுரை : மதுரை மாவட்டம் பேரையூர் அருகே எழுமலையை சேர்ந்தவர் பிரவீன் குமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
எழுமலையில் பெரியகுளம் கண்மாய் உள்ளது. இதில் ஆழ்துளை கிணறு அமைத்து மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இங்கு எழுமலை பேரூராட்சி துாய்மைப் பணியாளர்கள் குப்பை, மருத்துவக் கழிவுகளை குவிக்கின்றனர். தீயிட்டு எரிக்கின்றனர். சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். குப்பைக் கிடங்கு அமைக்க தகுந்த இடம் ஒதுக்க வேண்டும்.
தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும் குப்பைகளை குவிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: கண்மாயில் குப்பைகளை குவிக்க தடை விதிக்கப்படுகிறது. கலெக்டர், எழுமலை பேரூராட்சி செயல் அலு
வலருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.