/உள்ளூர் செய்திகள்/மதுரை/அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் பணி துவக்கம்அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் பணி துவக்கம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் பணி துவக்கம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் பணி துவக்கம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் பணி துவக்கம்
ADDED : ஜன 12, 2024 06:52 AM

அவனியாபுரம் : மதுரை அவனியாபுரத்தில் ஜன.15ல் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக திருப்பரங்குன்றம் ரோட்டில் குருநாதசுவாமி சமேத அங்காள ஈஸ்வரி கோயில், எம்.ஜி.ஆர்., சிலை முன்பு தற்காலிக வாடிவாசல் அமைக்கும் பணிகள் துவங்கின.
ஜல்லிக்கட்டு நடக்க உள்ள இடத்தில் மேடை, வாடிவாசல், பேரிகார்டு, குடிநீர், அடிப்படை வசதிகள், காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடம், வாடிவாசல் பின்பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி முதல் வாடிவாசல் வரை காளைகள் வரிசையாகச் செல்ல மூங்கில் தடுப்புகளும், அவனியாபுரம் பிரிவிலிருந்து பெரியார் செல்லும் ரோட்டின் இருபுறமும் பார்வையாளர்கள் நிற்பதற்காக மூங்கில் தடுப்புகளும், காளைகள் பரிசோதனை மையம், மாடுபிடி வீரர்கள் சோதனை மையம் ஆகிய பகுதிகளில் ரூ. 26 லட்சத்தில் மூங்கில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் மாநகராட்சி சார்பில் நடக்கிறது. தடுப்புகள் அமைக்கும் பணிகள் சில நாட்களுக்கு முன்பு துவங்கியது.