மின் இணைப்பிற்கு ரூ.1,500 லஞ்சம் பெண் வி.ஏ.ஓ., - உதவியாளர் கைது
மின் இணைப்பிற்கு ரூ.1,500 லஞ்சம் பெண் வி.ஏ.ஓ., - உதவியாளர் கைது
மின் இணைப்பிற்கு ரூ.1,500 லஞ்சம் பெண் வி.ஏ.ஓ., - உதவியாளர் கைது
ADDED : ஜூலை 13, 2011 01:40 AM
விழுப்புரம் : திண்டிவனம் அருகே விவசாயியிடம் 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிராப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐய்யப்பன். விவசாயி. தனது விவசாய மோட்டாருக்கு மின் இணைப்பு பெற விண்ணப்பத்தில் கையொப்பம் கேட்டு பேரணி கிராம நிர்வாக அதிகாரி அன்பழகியிடம் கொடுத்திருந்தார். அதற்கு அன்பழகி 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஐய்யப்பன் புகார் கூறினார்.
லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., (பொறுப்பு) திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் நேற்று காலை பேரணி வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது ஐய்யப்பன் விண்ணப்பத்துடன் சென்று லஞ்சப் பணம் 1,500 ரூபாயை கிராம உதவியாளர் பரமசிவத்திடம் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அதிகாரி அன்பழகி,56, கிராம உதவியாளர் பரமசிவம்,47 ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரையும் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.