ADDED : ஜன 12, 2024 06:38 AM
திண்டுக்கல் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து திண்டுக்கல்,தேனி,பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு 150 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.இதோடு சொந்த ஊரிலிருந்து சென்னை செல்லவும் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
திருப்பூர் 50,கோவை 75,திருச்சி 30,இதர ஊர்களுக்கு 50 பஸ் என கூட்டத்திற்கு ஏற்பட கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. திண்டுக்கல்,பழநி,திருச்சி,மதுரை உள்ளிட்ட ஊர்களிலிருந்து குமுளி வரை சபரிமலை செல்லும் பக்தர்களுக்காகவும் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது பயணிகளுக்கு உதவ அந்தந்த பகுதிகளில் போக்குவரத்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என திண்டுக்கல் மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.