Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/பொங்கல் விழா: வெளிநாட்டவர் பங்கேற்க முன்பதிவு; மதுரை கலெக்டர் அறிவிப்பு

பொங்கல் விழா: வெளிநாட்டவர் பங்கேற்க முன்பதிவு; மதுரை கலெக்டர் அறிவிப்பு

பொங்கல் விழா: வெளிநாட்டவர் பங்கேற்க முன்பதிவு; மதுரை கலெக்டர் அறிவிப்பு

பொங்கல் விழா: வெளிநாட்டவர் பங்கேற்க முன்பதிவு; மதுரை கலெக்டர் அறிவிப்பு

ADDED : ஜன 12, 2024 06:53 AM


Google News
மதுரை : பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், ஜன.16ம் தேதி சுற்றுலா துறை சார்பில் திருப்பரங்குன்றம் ஒன்றியம் துவரிமானில் வெளிநாட்டு பயணிகள் கலந்து கொள்ளும், தமிழக கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

அன்று காலை 9:00 மணிக்கு உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அரசு சிறப்பு பஸ்மூலம் துவரிமானுக்கு அழைத்துச்செல்லப்பட உள்ளனர். அங்கு கிராம மக்கள் வரவேற்புடன், பொங்கல் வைப்பது, பரதம் உட்பட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இரண்டாம் நாள் ஜன.17 அன்று காலை 10:00 மணிக்கு உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லுார் கிராமத்திற்கு வெளிநாட்டுப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அங்கு அவர்கள் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்வை பார்வையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த 2 நாள் நிகழ்வுகளிலும் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தங்கள் பெயர், பாஸ்போர்ட் விவரங்களுடன், மதுரை மேலவெளிவீதியில் உள்ள எண்: 1, மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதுதொடர்பாக 0452--233 4757 மற்றும் touristofficemadurai@gmail.com லும் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம் என, கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us